தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Wild Elephant Crossing Roads In Palani Kodaikanal Road

Wild Elephant crossing roads: சாலையில் உலா வந்த காட்டு யானை!

Feb 07, 2024 12:03 PM IST Manigandan K T
Feb 07, 2024 12:03 PM IST
  • பழனி-கொடைக்கானல் சாலை தேக்கங்தோட்டம் பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வருவதும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து சேதப்படுத்துவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை பழனி கொடைக்கானல் சாலையில் உலா வந்தது. தேக்கங்தோட்டம் பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளையும் அச்சமடைய செய்துள்ளது. வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
More