World Cup Schedule 2023: உலகக் கோப்பை அட்டவணையில் அரசியல் தலையீடு - குரல் எழுப்பிய எதிர்கட்சிகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  World Cup Schedule 2023: உலகக் கோப்பை அட்டவணையில் அரசியல் தலையீடு - குரல் எழுப்பிய எதிர்கட்சிகள்

World Cup Schedule 2023: உலகக் கோப்பை அட்டவணையில் அரசியல் தலையீடு - குரல் எழுப்பிய எதிர்கட்சிகள்

Jun 30, 2023 11:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 30, 2023 11:02 PM IST

  • 2023 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணைக்கு எதிராக எதிர் குரல்கள் எழும்பியுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளனர். உலகக் கோப்பை தொடக்க போட்டி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் விதமாக அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் உள்ள மற்ற முக்கிய மைதானங்களாக கருதப்படும் மெஹாலி, திருவனந்தபுரம் ஆகியவற்றில் ஒரு ஆட்டம் கூட இடம்பெறவில்லை. உலகக் கோப்பை அட்டவணை உருவாக்கத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், பிசிசிஐ பொது செயலாளர் ஜெய்ஷா மற்ற மாநிலங்களை காட்டிலும் குஜராத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இந்தியாவின் சிறந்த மைதானங்களில் ஒன்று என பெயரெடுத்த திருவனந்தபுரத்தில் ஒரு போட்டி கூட இடம்பெறவில்லை. மாறாக அகமதபாத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான மனீஷ் திவாரி, பாஞ்சாப்பில் உள்ள உலகக் கோப்பை மெஹாலி மைதானத்தில் இல்லாதது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். 2011 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி இந்த மைதானத்தில் தான் நடைபெற்றது. அரசியல் தலையீடு காரணமாக மெஹாலி மைதானம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல் , பிசிசிஐ பொது செயலாளர் ஜெய்ஷா மற்ற இந்திய மாநிலங்களை காட்டிலும் குஜராத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக திரணாமுல் காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது.

More