தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanniyakumari Water Scarcity: முக்கடல் அணையில் வெறும் 3.20 அடி மட்டுமே தண்ணீர்! குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Kanniyakumari Water Scarcity: முக்கடல் அணையில் வெறும் 3.20 அடி மட்டுமே தண்ணீர்! குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

May 04, 2024 09:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 04, 2024 09:00 PM IST
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகர் முழுவதும் மட்டுமல்ல கன்னியாகுமரி வரை உள்ள 200க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்களுக்கும் குடிநீருக்கான முக்கிய நீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. இந்த அணை நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோடைகாலம் நெருங்குவதற்கு முன்பே இங்கு தேவையான தண்ணீர் இருப்பு வைக்காததால் தண்ணீர் இப்போது மைனஸ் டிகிரிக்கு கீழ் சென்றுள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் உடைய நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி மைனஸ் 3.20 அடியாக குறைந்துள்ளது. எனவே நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என பல்வேறு தரப்பினர்களும் கூறுகின்றனர்
More