Agni Prime Missile: அக்னி ப்ரைம் ஏவுகணை - முதல் முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Agni Prime Missile: அக்னி ப்ரைம் ஏவுகணை - முதல் முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை

Agni Prime Missile: அக்னி ப்ரைம் ஏவுகணை - முதல் முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை

Jun 09, 2023 10:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 09, 2023 10:35 PM IST

  • புதிய தலைமுறை அக்னி ப்ரைம் பாலிஸ்ட் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் தீவு சோதனை தளத்தில் மாலை 7.30 மணியளவில் அணு ஆயுதம் தாங்கும் இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தபட்டிருக்கும் நிலையில் இந்திய பாதுகாப்பு படையில் இணைப்பதற்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன. அக்னி ப்ரைம் ஏவுகணை முதல் முறையாக இரவு நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின்போது இதன் செயல்பாடு தொடர்பான அனைத்து நோக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டது. Mobile Launcher மூலம் ஏவக்கூடிய தன்மை கொண்ட 10 மீட்டர் நீளமுடைய இந்த ஏவுகணை, ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. அக்னி 3 ஏவுகணையை விட 50 சதவீதம் குறைவான எடையை கொண்டதாக உள்ளது. புதிய வழிகட்டுதல்களுடன், புரோபல்ஷன் அமைப்பை கொண்டதாக உள்ளது. இதை நீண்ட நாள்கள் வரை  சேமித்து வைத்து கொள்ளலாம். அத்துடன் செயல்பாட்டின் தேவைக்கு ஏற்ப கொண்டு செல்லலாம். இந்த பரிசோதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்ட டிஆர்டிஓ குழுவினருக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று முறை அக்னி ப்ரைம் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அக்னி ஏவுகணைகளின் அப்கிரேட் வெர்ஷனாக இந்த அக்னி ப்ரைம் ஏவுகணைகள் உள்ளன.

More