Chhattisgarh Maoist Attack: போலீஸ் கான்வாயில் மாவோயிஸ்ட் தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு! வெளியான விடியோ காட்சிகள்
- சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே மாவோயிஸ்ட்கள், போலீஸ் கான்வே மீது 50 கிலோ ஐஇடி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரம் கழித்து தாக்குதல் தொடர்பான விடியோ வெளியாகியுள்ளது. மாவோஸ்ட்களின் இந்த திடீர் தாக்குதலில் 10 போலீசார் உயிரழந்த நிலையில், போலீஸ் ஒருவர் துப்பாக்கியுடன் பின்நோக்கி செல்வது போல் விடியோவில் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்புக்கு பின்னர் மொத்த வாகனமும் வெடித்து சிதறிவிட்டது என்று கத்தியுள்ளார். மற்றொரு போலீஸ் வாகனத்தின் கீழே ஊர்ந்தவாறு செல்கிறார்.தாக்குதல் நடந்த இடத்தில் குண்டுவெடிப்பால் 10 அடி ஆழத்தில் பள்ளம் உருவாகியுள்ளது. இந்த விடியோவை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த போலீசார் பதிவு செய்துள்ளார். அதில் அவர் பேசுகையில், மாவோயிஸ்டுக்கு எதிரான ஆபரேஷனில் கடந்த செவ்வாய் கிழமை முதல் போலீசார் ஈடுபட்டனர். இதன் பின்னர் திரும்பிகொண்டிருக்கையில் நண்பகல் 1.30 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 7 வாகனங்களாக வந்த போலீஸ் கான்வேயில் மூன்றாவது வாகனத்தை குறிவைத்து இந்து குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த வாகனத்தில் மட்டும் 70 போலீசார் வரை பயணித்துள்ளதாக தெரிகிறது. வெடித்த வாகனத்தின் அருகே எஸ்யூவி வாகனத்தில் தன்னுடன் 7 போலீசார் இருந்தனர். தாக்குதலின்போது எதிர் தாக்குதல் நாங்கள் நிகழ்த்தியபோது மாவேஸ்ட்கள் அங்கிருந்து தப்பி சென்று மறைந்தனர். மாநில தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் நிகழ்ந்த மிகப் பெரிய மாவோயிஸ்ட் தாக்குதலாக இது அமைந்துள்ளது.