Coimbatore: கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டும் தன்னார்வ அமைப்பு
- தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த இன்ஃப்ரா என்ற தன்னார்வ அமைப்பு டர்ஃப் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை சிகிச்சைக்கு வழங்க முடிவெடுத்தனர். அதன்படி கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, கரூர், நாமக்கல் மற்றும் அவிநாசியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இதுகுறித்து இன்ஃப்ரா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் காமராஜ் கூறுகையில், தசைநார் சிதைவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையிலும் நிதி திரட்டுவதற்காக இந்த கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறோம், இதில் கிடைக்கும் நிதியை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை மற்றும் வாழ்வை மேம்படுத்த முழுமையாக வழங்குவோம் என தெரிவித்தார்.