பானிபூரிக்கு அடுத்து மோமோஸ்: இது மம்தா பானர்ஜி ஸ்பெஷல்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பானிபூரிக்கு அடுத்து மோமோஸ்: இது மம்தா பானர்ஜி ஸ்பெஷல்!

பானிபூரிக்கு அடுத்து மோமோஸ்: இது மம்தா பானர்ஜி ஸ்பெஷல்!

Jul 14, 2022 10:27 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 14, 2022 10:27 PM IST

பானிபூரி தயாரிப்பதில் தனது திறமையை வெளிப்படுத்திய மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது வடகிழக்கு பகுதியில் மிகவும் பிரபலமான சிற்றுண்டியான மோமோஸ் தயார் செய்துள்ளார். டார்ஜிலிங் நகருக்கு சென்றுள்ள மம்தா, அங்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் பானிபூரி கடை ஒன்றை திறந்து வைத்தார். அப்படியே அங்கிருந்த குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிருதுவான பானிப்பூரிகளை பரிமாறினார். இந்த செயலுக்கு பிறகு அடுத்த நாளில் டார்ஜிலிங் நகரில் உள்ள வீடு ஒன்றில் மோமோஸ் சமைத்துள்ளார். அங்குள்ள அடுப்பாங்கறையில் அமர்ந்தவாறு மோமோ மாவை கையில் பிசைந்து அருகில் இருந்த பாட்டியுடன் உரையாடியவாறு மோமோஸ் தயாரித்துள்ளார். மிகவும் கேஷுவலாக மோமோஸ் சமைத்த மம்தாவின் எளிமையை நெட்டிசன்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.

More