Viral Video: ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லீம் பெண்! தீவிரவாதி என கூறி தகராறில் ஈடுபட்ட நபர்
- அமெரிக்காவில் உள்ள ப்ளோரிட விமான நிலையத்தில் முஸ்லீம் பெண் ஒருவரிடம் தீவரவாதி என கூறி ஒரு நபர் தகராறில் ஈடுபட்ட விடியோ வைரலாகியுள்ளது. அதில் ஹிஜாப் அணிந்து விமான நிலையத்தில் அமர்ந்திருந்த முஸ்லீம் பெண்ணை நோக்கி, ஆண் ஒருவர் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். முஸ்லீம்கள் அனைவரும் அமெரிக்காவை வெறுக்கிறார்கள் என கூறி, அந்த பெண்ணை பார்த்து தீவிரவாதி என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து வேறு சில நபர்கள் தலையிட்டு பெண்ணை, அந்த நபரிடமிருந்து காப்பாற்றியுள்ளார். பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேறொரு விமானத்தின் மூலம் அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பெயர் சல்மா கான் என்பதும், அவருக்கு வயது 27 என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீசாரும் தனது தரப்பிலிருந்து வாக்குமூலம் பெறவில்லை என சல்மா கான் தெரிவித்துள்ளார்