தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  வாக்கு சதவீதம் அறிவிப்பதில் என்ன குழப்பம்? - திருமாவளவன் அடுக்கிய குற்றச்சாட்டுகள்

வாக்கு சதவீதம் அறிவிப்பதில் என்ன குழப்பம்? - திருமாவளவன் அடுக்கிய குற்றச்சாட்டுகள்

May 01, 2024 07:12 PM IST Karthikeyan S
May 01, 2024 07:12 PM IST
  • உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது. வாக்குப்பதிவு குறித்து தேர்தல் அன்று ஒரு சதவிகிதமும் சில நாட்கள் கழித்து வேறு சதவீதமும் அறிவிக்கிறது. 11 நாட்கள் கழித்து வாக்கு பதிவு சதவீதத்தை மாற்றி அறிவித்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் இதனை தெளிவுபடுத்த வேண்டும், அறிவியல் பூர்வமாக இதில் எந்த மாறுபாடும் இல்லை என்று உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More