தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vaikasi Visakam: பழனியில் துவங்கியது வைகாசி விசாக திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Vaikasi Visakam: பழனியில் துவங்கியது வைகாசி விசாக திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

May 16, 2024 05:05 PM IST Karthikeyan S
May 16, 2024 05:05 PM IST
  • பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து காலை கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவான 21-ம் தேதி மாலை அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெயாவானை திருக்கல்யாணமும், தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 7-ம் நாளான 22 ம்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதையடுத்து 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. வருகின்ற 25 ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் லட்சுமி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
More