தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanchipuram: கொடியேற்றத்துடன் தொடங்கியது காஞ்சிபுரம் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா !

Kanchipuram: கொடியேற்றத்துடன் தொடங்கியது காஞ்சிபுரம் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா !

May 20, 2024 01:53 PM IST Karthikeyan S
May 20, 2024 01:53 PM IST
  • காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன. கருடாழ்வார் ஓவியம் பொறித்த கொடியானது கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. வரும் 22 ஆம் தேதி முக்கிய நிகழ்வான கருட சேவையும், 26 ஆம் தேதி மகாரதம் எனப்படும் தேரோட்டமும் நடைபெறுகிறது. வரும் 28ஆம் தேதி தீர்த்தவாரியும் மறுநாள் 29ஆம் தேதி இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் வீதி உலா வரும் நிகழ்வோடும் வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது.
More