Flight Door Opened: 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது போயிங் விமான கதவு பறந்தது! பயணிகள் அலறல்
- அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம், 1282 அதன் கதவுகளில் ஒன்று நடுவானில் திறந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. போயிங் 737-9 மேக்ஸ் விமானம், அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்டில் இருந்து கலிபோர்னியா மாகாணம் ஒன்டாரியோவுக்கு 171 பயணிகளுடன், 6 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது. பயணிகளால் எடுக்கப்பட்ட விடியோக்கள், விமானத்தில் இருந்து மிட் கேபின் வெளியேறும் கதவு முற்றிலும் பிரிக்கப்பட்ட காட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்த நிகழ்வு போயிங் 737 விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. விமானம் பயணம் செய்து கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் அதில் இருந்த பயணிகள் அலறியடித்தனர். விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜன்னல் கதவுகள் வெளியேறியதால் கேபினில் அழுத்தம் ஏற்பட்டு காரணத்தால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மிகப் பெரிய சத்தத்துடன் ஜன்னல் உடைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் உடனடியாக விமானத்தில் இடம்பிடித்திருக்கும் ஆக்சிஜன் மாஸ்குகள் வெளியேறியது. தற்போது அலாஸ்கா ஏர்லைன்ஸ் தங்களுக்கு சொந்தமான 65 போயிங் 737-9 விமானங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.