Viral Video: உபியில் முஸ்லீம் மாணவர் கன்னத்தில் அறைய சொன்ன ஆசிரியை மீது வழக்குப்பதிவு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: உபியில் முஸ்லீம் மாணவர் கன்னத்தில் அறைய சொன்ன ஆசிரியை மீது வழக்குப்பதிவு

Viral Video: உபியில் முஸ்லீம் மாணவர் கன்னத்தில் அறைய சொன்ன ஆசிரியை மீது வழக்குப்பதிவு

Aug 27, 2023 01:21 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 27, 2023 01:21 PM IST

  • உத்தரபிரதேசம் மாநிலத்தில் வீட்டுப்பாடத்தை முடிக்காத முஸ்லீம் மாணவரின் கன்னத்தில் அறையுமாறு சக மாணவர்களிடம் ஆசிரியை கூறிய விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த மாநில போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பாதிப்புக்குள்ளான மாணவனன் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த செயலை செய்ய சொன்ன ஆசிரியையான த்ரப்தி தியாகி என்பவர் மீது ஐபிசி பிரிவு 323, 504 ஆகிவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முசாபர்நகர் அருகேயுள்ள குப்பாபூர் என்ற கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கருத்துகளை தெரிவித்தனர். ஒன்றாம் வகுப்பு படிக்கு மாணவனிடம் வகுப்புவாத பிரிவினை ஏற்படுத்துமாறு அந்த ஆசிரியை நடந்துகொண்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு, "கடந்த ஒரு மாத காலமாக பாடத்தை சரியாக படிக்காமல் அந்த மாணவர் இருந்துள்ளார். அவரை ஒழுங்குபடுத்த முடிவு செய்தேன். நான் மாற்ற திறனாளி என்பதால் இன்னொரு மாணவரை வைத்து அடிக்க சொன்னேன். அடி வாங்கிய பின் அந்த மாணவர் ஒழுங்காக படிக்கவும், வீட்டு பாடங்கள் முடிக்கவும் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்தான் என்னை அடிக்க சொன்னார். எங்கள் கிராமத்தில் இந்து - முஸ்லீம் பாகுபாடின்றி வாழ்ந்து வருகிறோம்" என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் பள்ளிக்கல்வித்துறையும் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

More