Japan Tsunami Alert: சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் ஒரு மீட்டர் உயரத்தில் எழும்பிய கடல் அலைகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Japan Tsunami Alert: சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் ஒரு மீட்டர் உயரத்தில் எழும்பிய கடல் அலைகள்

Japan Tsunami Alert: சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் ஒரு மீட்டர் உயரத்தில் எழும்பிய கடல் அலைகள்

Published Jan 02, 2024 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jan 02, 2024 11:30 PM IST

  • ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜனவரி 1ஆம் தேதி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானில் இருக்கும் வாஜிமா நகரத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பிய காட்சி பதைபதைக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. கடல் அலையானது 5 மீட்டர் வரை எழும்பகூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2011இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி பாதிப்பால் 18,500 பேர் வரை இறந்திருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது 9.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்த தற்போது 12 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் மீண்டும், நிலநடுக்கம், சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக கடற்கரை பகுதியான இஸ்கிகாவா, நிகாடா, டோயாமா பகுதிகளில் சுனாமி பாதிப்புக்கான எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானில் இருக்கும் அணுமின் நிலையங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடக்கிறதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்துக்கு பிறகு அனைத்து அதிவேக ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

More