Gujarat Flood: குஜராத்தில் ஆற்று பாலத்தை கடக்கும்போது வெள்ள நீரால் இழுத்து செல்லப்படும் டேங்கர் லாரி - வைரல் விடியோ
- குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்களான வதோத்ரா, அகமதாபாத், காந்திநகர், குட்ச் பகுதிகளில் தொடர் மழை பெய்துள்ளது. மழை காரணமாக லூனி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற டேங்கர் லாரி ஒன்று வெள்ளநீரால் அடித்து இழுத்து செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது.