தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kodaikanal Bryant Park: விரைவில் தொடங்கும் மலர் கண்காட்சி..கழுகு பார்வையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா!

Kodaikanal Bryant Park: விரைவில் தொடங்கும் மலர் கண்காட்சி..கழுகு பார்வையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா!

May 09, 2024 05:46 PM IST Karthikeyan S
May 09, 2024 05:46 PM IST
  • மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கும் இடமாக பிரையண்ட் பூங்கா விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இவ்விழாவின் தொடக்கமாக முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும். ஆனால், இந்தாண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருப்பதால் முன்கூட்டியே கோடை விழாவை நடத்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து மே 17 ஆம் தேதி கோடை விழாவைத் தொடங்கி மே 26ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பூக்கள் தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டது. எனவே மலர்கண்காட்சியை விரைந்து நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More