Guinness Record: கின்னஸ் சாதனை முயற்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள்! மண்டபம் முதல் மெரினா வரை நீச்சல் பயணம்
- கின்னஸ் சாதனை முயற்சியாக 15 மாற்றுத்திறனாளி குழந்தைகள் ராமேஸ்வரம் பாம்பனில் இருந்து, சென்னை மெரினா வரை நீச்சல் அடித்தவாறே சென்றடையவுள்ளார்கள். ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கும் இவர்களின் நீச்சல் பயணம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நிறைவடைகிறது. தமிழ்நாடு மீன்வர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் இணைந்து நடத்தும் இந்த சாதனை நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்களது பயணத்தை தொடங்கியுள்ளார்கள்.