Annamalai: ‘நான் சின்னப் பையனா?’.. ஆர்.எஸ்.பாரதி விஷயத்தில் அண்ணாமலை ஆவேசப் பேட்டி!
- கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி என் மீது அவதூறு பரப்பினார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது. எனவே, ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரிடம் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளோம். என்னை சின்னப் பையன் என்று கூறிய ஆர்.எஸ். பாரதி இப்போது இந்த வழக்கின் மூலம் நான் யார் என்பதை புரிந்து கொள்வார்." என்றார்.