NEET EXam Result: நீட் தேர்வில் முதலிடம் பிடித்து திருவண்ணாமலை மாணவி சாதனை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Neet Exam Result: நீட் தேர்வில் முதலிடம் பிடித்து திருவண்ணாமலை மாணவி சாதனை!

NEET EXam Result: நீட் தேர்வில் முதலிடம் பிடித்து திருவண்ணாமலை மாணவி சாதனை!

Published Jun 06, 2024 03:43 PM IST Karthikeyan S
Published Jun 06, 2024 03:43 PM IST

  • திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலை தாமரை நகரை சேர்ந்த மணிகண்டன்- அபிதகுஜாம்பால் தம்பதியினரின் மகளான ஜெயதி பூர்வஜா நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்காக அவர் சிரமப்பட்டு படித்ததாகவும், பள்ளியின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை அல்லது எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்க உள்ளதாகவும் உயர் மருத்துவபடிப்புகள் படித்து இந்தியாவிலேயே தங்கி சேவை செய்ய இருப்பதாகவும், ஏழை மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் சால்வை அணிவித்து மாணவிக்கு மருத்துவ உபகரணமான ஸ்டெதஸ்கோப் பரிசாக வழங்கினார்.

More