Jammu Kashmir Terror Attack: ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றாவது நாளில் முன்னாள் போலீஸ் எஸ்பி சுட்டுக்கொலை
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்பி முகமது ஷஃபி தீவிரவாதிகளால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ட்முல்லா பகுதியில் இருந்த மசூதி ஒன்றில் முன்னாள் போலீஸ் அதிகாரி தொழுகைக்கு சென்றிருந்தபோது அவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்த தீவிரவாதிகளை பிடிப்பதற்காக அந்த பகுதி போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 அன்று ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட உள்ளூர் வாசிகள் மூன்று பேர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசார் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயங்களுன் முகமது ஷஃபி இறந்து கிடந்ததை காஷ்மீர் போலீஸார் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். முன்னாள் போலீசார் சுட்டுக்கொல்வதற்கு முன்னர் ஸ்ரீநகரில் போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டார். வடக்கு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரது வீடு அருகே தாக்கப்பட்டார்.கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கையில் தாக்குதலுக்கு உள்ளாகி கடுமையாக காயமடைந்தார்.