உலக சாதனை படைத்த பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி - பிரத்யேக காட்சி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  உலக சாதனை படைத்த பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி - பிரத்யேக காட்சி!

உலக சாதனை படைத்த பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி - பிரத்யேக காட்சி!

Feb 11, 2024 12:48 PM IST Karthikeyan S
Feb 11, 2024 12:48 PM IST

  • World Record: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரம் கிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 5 வயது முதல் 50 வயது வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர். சென்னை, பெங்களூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து நடன கலைஞர்கள் பழனிக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாட்டியம் ஆடுவதற்கு தகுந்தாற்போல் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து நடனம் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. இதுவரை நடன நாட்டியத்தோடு காவடி சிந்தையும் இணைத்து ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடியது இதுவே முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியை விர்ஷா உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் செய்து சான்றிதழை வழங்கியது.

More