தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Thousands Of Devotees Visits Palani Murugan Temple

Palani Murugan Temple: பழனியில் குவியும் பக்தர்கள் பட்டாளம் - என்ன காரணம்?

Mar 31, 2024 01:30 PM IST Karthikeyan S
Mar 31, 2024 01:30 PM IST
  • அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 18 ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கி 28ஆம் தேதி கொடி இறக்கத்துடன் பத்து நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் தீர்த்த காவடிகள் எடுத்து குவிந்து வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரிவலப்பாதையில் தீர்தகாவடிகள் எடுத்து ஆடி பாடியும்,மின் இழுவை ரயில் நிலையம்,ரோப் கார் நிலையம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு வசிதிக்காக 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
More