Palani: பூட்டியிருந்த கடையின் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர் கைவரிசை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani: பூட்டியிருந்த கடையின் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர் கைவரிசை!

Palani: பூட்டியிருந்த கடையின் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர் கைவரிசை!

Jul 26, 2024 03:09 PM IST Karthikeyan S
Jul 26, 2024 03:09 PM IST

  • திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமி தியேட்டர் அருகில் கட்டிடங்கள் கட்டும் கட்டுமான நிறுவனம் அலுவலகம் மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கடையின் சட்டரை உடைத்து கடைக்குள் சென்ற நபர் அங்கு இருந்த ரொக்கம் பணம் ரூ.8 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரைத் தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி நகரின் மையபகுதியில் அலுவலக சட்டரை பூட்டை உடைத்து அலுவலகத்தில் இருந்த பணம் திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் காவல் துறையினர் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More