தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  The Police Gave A Gift To The Guardian Deity Of Coimbatore, Koniyamman Temple

Coimbatore: கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோயிலுக்கு சீர்வரிசை கொடுத்த காவல்துறை!

Feb 29, 2024 04:30 PM IST Pandeeswari Gurusamy
Feb 29, 2024 04:30 PM IST
  • கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அன்னதானம் நீர்மோர் குளிர்பானங்கள் ஆகியவற்றையும் வழங்குவர். தேர்நிலைத் திடல் பகுதியில் துவங்கும் இந்த தேரோட்டம் ஒப்பணக்காரர் வீதி வழியாக பிரகாசம் வந்தடைந்து மீண்டும் தேர் நிலை சென்றடையும். இந்நிலையில் வருடம் தோறும் கடைவீதி காவல் நிலையத்தில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்படும். அதன்படி இந்த வருடமும் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார்.
More