தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  The Mother Elephant Who Lost Her Cub Was Pitiful.. Forest Department Fought Hard

குட்டியை தவற விட்டு பரிதவித்த தாய் யானை.. போராடி சேர்த்த வனத்துறை

Feb 24, 2024 04:23 PM IST Pandeeswari Gurusamy
Feb 24, 2024 04:23 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பிஏபி காண்டூர் கால்வாயில் காட்டு யானை குட்டியுடன் தவறி விழுந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குட்டியும் தாயும் கால்வாயில் இருப்பதையும் பார்த்தனர். பின்னர் யானைக்குட்டி வெளியே வரமுடியாமல் தாய்யானை இருப்பதையும் கவனித்துள்ளனர். பின்னர் தாய் யானையிடமிருந்து குட்டியானை சற்று தொலைவில் இருக்கும் தருணத்திற்காக காத்திருந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக கால்வாயில் இறங்கி குட்டியானை மீட்டனர். பின்னர் சமதள பரப்பில் வைத்து தாய் யானையிடம் குட்டியை ஒன்று சேர்த்து வைத்தனர். இந்த வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். வனத்துறையினர் துரிதமான பணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More