தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Modi: 'மீண்டும் மோடி பிரதமர் ஆவார்' சைகை மூலம் குறி சொன்ன காளை மாடு!

PM Modi: 'மீண்டும் மோடி பிரதமர் ஆவார்' சைகை மூலம் குறி சொன்ன காளை மாடு!

May 20, 2024 07:39 PM IST Karthikeyan S
May 20, 2024 07:39 PM IST
  • பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் அமைந்துள்ளது நந்திவனநாதர் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலை அமைத்து வழிபாடுகள் நடத்தி வந்த பேரூர் மடத்தின் தொண்டர், நாகலிங்கேஸ்வரி சித்தர் பீட குமாரசாமி அடிகளார் கடந்த 48 நாட்களுக்கு முன்பு இக்கோவில் வளாகத்தில் ஜீவசமாதி அடைந்தார். மறைவை அடுத்து குமாரசாமி அடிகளாரின் 48ம் நாள் நிறைவு வழிபாடு (ஜீவசமாதி வழிபாடு) கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், சிவனின் வாகனமாக கருதப்படும் காளை மாட்டிற்கு சிவா எனப் பெயரிட்டு இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த மாட்டின் அடிப் பகுதியில் சிவன் முத்திரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பதிந்துள்ளது. பக்தர்களுக்கு பிரதோஷம் தினத்தன்று தனது முன்னகால்களால் காளை மாடு ஆசிர்வாதம் செய்கிறது. இந்த நிலையில், பாரத பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்கள் என சைகை மூலம் சிவா குறி சொல்லியுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
More