Vijay Banner Removed: தி கோட் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு தெரியாமல் விஜய் பேனர்கள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
- திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ராஜேந்திரா, உமா திரையரங்கம் மற்றும் ஆர்த்தி கிராண்ட் உள்ளிட்ட திரையரங்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தி கோட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது, இதையடுத்து ரசிகர்கள் தி கோட் ரிலீஸை கொண்டாடும் விதமாக 20க்கும் மேற்பட்ட பேனர்களை உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி மாநகராட்சி அனுமதி பெறாமல் திரையரங்குகள் முன்பு சாலை ஓரங்களில் வைத்தனர். இதனால் திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் சென்ற பின்பு இந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது.