தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Temple Festival: முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு சொன்ன பூசாரி - பக்தர்கள் பரவசம்!

Temple Festival: முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு சொன்ன பூசாரி - பக்தர்கள் பரவசம்!

May 16, 2024 08:25 PM IST Karthikeyan S
May 16, 2024 08:25 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் மற்றும் சுடலை மாடசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கொடை விழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முள் படுக்கையில் படுத்து பூசாரி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் வாசலில் 6 அடி உயரம் 10 அடி அகலத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது. அந்த முள் படுக்கையில் படுத்து பூசாரி ஜெயபால் அருள் வந்தபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
More