தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Temple Elephant: பிரத்யேக நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட கோயில் யானை!

Temple Elephant: பிரத்யேக நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட கோயில் யானை!

Apr 24, 2024 03:25 PM IST Karthikeyan S
Apr 24, 2024 03:25 PM IST
  • பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. தற்போது 57 வயதாகும் கஸ்தூரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களில் பங்கேற்கிறது. இந்தநிலையில், பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் வாட்டி வதைக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமப்படுகின்றன. இதற்காக, காரமடை தோட்டத்தில் ரூ.10 லட்சத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் குளம் அமைக்கப்பட்டது. அதில் யானை கஸ்தூரி நீச்சல் அடித்தும், மூழ்கி குளித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது. கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கஸ்தூரி யானை காலை, மாலை என இருவேளைகளில் ஆனந்த குளியல் போட அழைத்துவரப்படுகிறது.
More