Tamilisai Soundarrajan: "28 பிட்டு துணியை வச்சு ஒரு போர்வை போர்த்தி கொண்டுள்ளீர்கள்" - காங்கிரஸை விமர்சித்த தமிழிசை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tamilisai Soundarrajan: "28 பிட்டு துணியை வச்சு ஒரு போர்வை போர்த்தி கொண்டுள்ளீர்கள்" - காங்கிரஸை விமர்சித்த தமிழிசை

Tamilisai Soundarrajan: "28 பிட்டு துணியை வச்சு ஒரு போர்வை போர்த்தி கொண்டுள்ளீர்கள்" - காங்கிரஸை விமர்சித்த தமிழிசை

Published Jun 08, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 08, 2024 06:45 PM IST

  • சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது: "மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையுடன் டெல்லி செல்கிறேன். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பல வாய்ந்த பிரதமராகவும், நாட்டை பலம் பொருந்திய நாடாக மாற்றும் முயற்சியில் பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க அங்கு செல்கிறோம். இந்த தேர்தலில் ஒரு வியப்பான விஷயமாக அதிக இடங்கள் வாங்கிய பாஜகவை, குறைவான இடங்களை வாங்கிய காங்கிரஸ் விமர்சிக்கிறது. இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. கூட்டணி ஆட்சியை நடத்துவது சிரமம் என்கிறார் சிதம்பரம். அவர்களுக்கு கட்சி நடத்துவது சிரமமாக உள்ளது. பாஜக அனுபவம் வேறு. எதிரணியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியை கிடைக்க விடாமல் ஸ்டாலின் தனது சுயநலத்துக்காக எப்போதுமே துரோகம் செய்வார். நாங்கள் மக்களுக்காக பணியாற்றுகிறோம். தமிழக மக்களுக்கு வேண்டிய திட்டங்களை போராடி பெறுவோம். பாஜகவுடன் சேர்ந்தாலே தோல்வி அடைவோம் என சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்றாலும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் இருப்பது எல்லா தொண்டர்களை போலாவும் கவலையாக பார்க்கிறேன். எங்களுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பதை காட்டிலும், எந்த பலனும் இல்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்பது கவலை அளிக்கிறது" என்றார்.

More