Tiruchendurai: திருச்செந்துறை கோயில் வக்பு வாரிய சொத்தா..? - பின்னணி என்ன?
- திருச்சி ஜெயபுரம் அருகே திருச்செந்துறை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என சர்ச்சை எழுந்தது. மேலும், அங்குள்ள சந்திரசேகர சுவாமி கோயில் அமைந்துள்ள இடமும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என கூறப்பட்டது. மேலும். அந்த கிராமத்தின் நிலத்தை வாங்கவும், விற்கவும் வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நிலத்தை வாங்கவே விற்கவோ தடையில்லை என அறிவித்தது. இந்தநிலையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு திருச்செந்துறை கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.