தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..14 முதலீடு திட்டங்கள், 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு - தங்கம் தென்னரசு
- சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பின்னரும், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் நடந்த அமைச்சரவை கூட்டமாக இது அமைந்தது. இதில், ரூ.38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதன் முழு விடியோ இதோ