DMK: தேனி தொகுதியில் திமுக தோற்றால் ராஜினாமா.. அமைச்சர் மூர்த்தி திடீர் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dmk: தேனி தொகுதியில் திமுக தோற்றால் ராஜினாமா.. அமைச்சர் மூர்த்தி திடீர் அறிவிப்பு!

DMK: தேனி தொகுதியில் திமுக தோற்றால் ராஜினாமா.. அமைச்சர் மூர்த்தி திடீர் அறிவிப்பு!

Published Mar 26, 2024 10:27 AM IST Karthikeyan S
Published Mar 26, 2024 10:27 AM IST

  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, 'தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றிபெற செய்யாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினமா செய்வேன்." என்றார்.

More