தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Caste Based Census: சாதிவாரி கணக்கெடுப்பு.. சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம் - வீடியோ

Caste Based Census: சாதிவாரி கணக்கெடுப்பு.. சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம் - வீடியோ

Jun 26, 2024 07:17 PM IST Karthikeyan S
Jun 26, 2024 07:17 PM IST
  • சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தனித் தீர்மனத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. மக்கள் அனைவருக்கும் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
More