'தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி' அசர வைத்த சீர் வரிசை ஊர்வலம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி' அசர வைத்த சீர் வரிசை ஊர்வலம்

'தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி' அசர வைத்த சீர் வரிசை ஊர்வலம்

Feb 26, 2024 02:09 PM IST Pandeeswari Gurusamy
Feb 26, 2024 02:09 PM IST

  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கீழ் மழை பகுதியான கே சி பட்டியில் விவசாயி. தொழிலதிபர் AC ஐயப்பன் தனது மகள் தீபா அக்ஷயாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தினார். விழாவிற்காக வீட்டில் அருகிலேயே மிகப்பிரமாண்டமான பந்தல் அமைத்திருந்தார். விழாவின் முக்கிய பங்கு வகிக்கும் தாய்மாமன் சம்பத்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் பகுதியில் இருந்து தனது தங்கை மகளை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்டவைகளும் அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 233 வகைகளில் சீர் கொண்டு வந்தனர். முடிந்தவரை தங்கள் தலைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ளவை லாரியில் வைத்தும் கொண்டு வந்தனர். மேளதாளம் முழங்க கேரளா செண்டை மேளம். கேரளா பாரம்பரிய நடனம் என பல தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த விழா ஏற்பாடு அந்த மலை கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் இருந்தது. தாய்மாமன் சீர்வரிசையுடன் தனது மருமகளையும் அழைத்துக் கொண்டு விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தார்

More