தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: மதுவால் விபரீதம்..! இரு தரப்பினர் கற்கள் வீசி மோதல் - கோவையில் பரபரப்பு சம்பவம்

Coimbatore: மதுவால் விபரீதம்..! இரு தரப்பினர் கற்கள் வீசி மோதல் - கோவையில் பரபரப்பு சம்பவம்

May 04, 2024 07:51 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 04, 2024 07:51 PM IST
  • கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்குள்ள வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். அதன்படி மே 3ஆம் தேதி (நேற்று) இரவு தயரிட்டேரி மற்றும் கக்கன் வீதியை சேர்ந்த சிலர் அங்கு வந்து அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அதில் ஒருவரின் மனைவி கணவனை அழைக்க வந்து உள்ளதாக கூறப்படுகிறது. கணவன் மது அருந்துவதை பார்த்த அவர் கணவரை மது அருந்த கற்று கொடுத்ததை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கணவன் - மனைவி இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த இரண்டு பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் பொங்கி அம்மாள் வீதிக்கு வந்து கற்கள், கட்டைகளால் வீசி ஒருவரை, ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் இரு தரப்பினர் மாறி, மாறி மோதி கொண்ட சம்பவம் அரங்கேறியது. இரு வீதிகளை பின்னர் இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்க காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கிருந்த கூட்டத்தினரை அப்புறப்படுத்திய காவல் துறையின் அங்கு இருந்து கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது
More