விமரிசையாக நடைபெற்ற எமதர்மன் கோயில் கும்பாபிஷேகம் - பிரத்யேக காட்சி!
- இந்தியாவிலேயே எமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தருக்கும் தனி சன்னதி உள்ள தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகா சமேத வாஞ்சிநாத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விநாயகர் ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. எட்டு கால யாக பூஜைகள் முடிவடைந்து இன்று மகா பூர்ணாஹதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிவ வாத்தியங்கள் இசைக்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்த பின்னர் கடங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீர் ஒரே நேரத்தில் 9 விமான கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.