ரிவர்ஸ் எடுக்கும் போது விமான றெக்கை பகுதி எலெக்ரிக் போஸ்டரில் மோதி விபத்து
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ரிவர்ஸ் எடுக்கும் போது விமான றெக்கை பகுதி எலெக்ரிக் போஸ்டரில் மோதி விபத்து

ரிவர்ஸ் எடுக்கும் போது விமான றெக்கை பகுதி எலெக்ரிக் போஸ்டரில் மோதி விபத்து

Mar 29, 2022 12:08 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 29, 2022 12:08 PM IST

விமானத்தை பின்நோக்கி இழுக்கும்போது அதன் றெக்கையில் இணைந்திருக்கும் அய்லிரான் என்ற பகுதி அங்கிருந்த எலெக்ட்ரிக் கம்பம் மீது மோதி சிறிய அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியிலிருந்து - ஜம்மு காஷ்மீருக்கு புறப்படுவதாக இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பின்நோக்கி எடுக்கப்பட்டது. அப்போது வலது றெக்கை பகுதியில் இணைந்திருக்கும் அய்லிரான் எலெக்ட்ரிக் போஸ்ட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அய்லிரான் பகுதி உடைந்து பாதிப்புக்கு உள்ளானது. றெக்கை உள்ள நகரும் தன்மை கொண்ட பகுதிகள் அனைத்தும் விமானியின் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும். இவை விமானத்தை நீள்வெட்டு அச்சில் திருப்புவதற்கு பயன்படும். அதுபோன்றதொரு அமைப்பான அய்லிரான்கள் (விமான றெக்கையின் பின் விளிம்பில் உள்ள மேற்பரப்பு, பக்கவாட்டு சமநிலையை கட்டுப்படுத்த பயன்படுகிறது) விமானத்து திருப்புவதற்கு முதன்மையான பயன்படுகிறது. பல்வேறு வடிவங்களில் மாறியிருக்கும் இந்த அய்லிரான்கள் றெக்கையின் பின் பகுதியில் முனக்கை அருகில் அமைந்திருக்கும். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

More