Accident: சாலையில் திடீரென திரும்பிய முதியவர்! வேகமாக மோதிய பஸ் பெட்ரோல் பங்கில் நுழைந்த அதிர்ச்சி சிசிடிவி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Accident: சாலையில் திடீரென திரும்பிய முதியவர்! வேகமாக மோதிய பஸ் பெட்ரோல் பங்கில் நுழைந்த அதிர்ச்சி சிசிடிவி

Accident: சாலையில் திடீரென திரும்பிய முதியவர்! வேகமாக மோதிய பஸ் பெட்ரோல் பங்கில் நுழைந்த அதிர்ச்சி சிசிடிவி

Published Jul 26, 2024 10:05 AM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 26, 2024 10:05 AM IST

  • திருப்பத்தூர் மாவட்டம் ஓமகுப்பம் பகுதி சேர்ந்த பாப்பண்ணன் மகன் புட்டன்(70). இவர் தனது வீட்டில் இருந்து மிட்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்கு வந்துள்ளார். சாலையின் எதிர் திசையில் உள்ள பெட்ரோல் பங்கில் செல்வதற்கு சாலையை திடீரென கடந்துள்ளார். அப்போது ஆலங்காயம் பகுதியை சேர்ந்த காதர் பாஷா மகன் சாருக் என்பவர் தனியாருக்கு சொந்தமான பேருந்தை ஓட்டி வந்துள்ளார். சாலையை கடந்த புட்டன் மீது அதிவேகமாக வந்து பேருந்து மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காட்சிகள் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. மேலும் இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் போட சாலையைக் கடந்த முதியவர் மீது பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More