Telangana: தெலங்கானா: கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து! அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்
- தெலங்கானா மாநிலம் ஜெடிமெட்லா அருகே குட்டபுல்லாபூர் பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த மாணவன், சாலையில் நடந்து சென்ற நபர் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் விபத்தில் சிக்கிய நபர் சில மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கும் நிலையில், சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் ஜெடிமெட்லா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.