தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Sp Velumani Accusation On Dmk And Bjp It Wings

S.P.Velumani: 'அதிமுக ஐடி-விங்க்ல் ஆபாசமாக..' எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி!

Mar 03, 2024 12:45 PM IST Karthikeyan S
Mar 03, 2024 12:45 PM IST
  • கோவை குளத்துப்பாளையம் பகுதியில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஐடி விங்க் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரிய கட்சியாக, உலகத்தில் 7-வது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். திமுக, பாஜக ஐடி விங்க் பொய் பரப்புரை செய்கிறார்கள். மற்ற ஐடி விங்க் ஒருவர் இருந்து கொண்டு, இருபது பேர் இருப்பது போல போடுவார்கள். அதிமுக ஐடி விங்க் சரியான தகவல்களை போடுவார்கள். ஆபாசமாக போடமாட்டார்கள். பொய்யான தகவல்களை பரப்ப மாட்டார்கள். மற்றவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையில் ஐடி விங்க் செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும். தற்போது எல்லோரும் போன் வைத்திருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் வாக்குகளை கவரும் வாய்ப்பை அதிமுக ஐடி விங்க் உருவாக்கும்." எனத் தெரிவித்தார்.
More