தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sourav Ganguly: இந்திய அணி முன்னாள் கேப்டன், முன்னாள் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு Z வகை பாதுகாப்பு

Sourav Ganguly: இந்திய அணி முன்னாள் கேப்டன், முன்னாள் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு Z வகை பாதுகாப்பு

May 17, 2023 05:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 17, 2023 05:55 PM IST
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், முன்னாள் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு Z வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள அரசு அவருக்கான பாதுகாப்பை Y வகையிலிருந்து Z வகையாக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு Y வகை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் அது காலவதியானது. இதைத்தொடர்ந்து கங்குலிக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் மூன்றாவது உச்சபட்ச பாதுகாப்பு கங்குலிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் Z வகை பாதுகாப்பில் கங்குலிக்கு 22 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் 4 முதல் 6 தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களும், 8 முதல் 10 போலீஸ் அலுவலர்களும் இருப்பதோடு, அவருக்கென தனியாக எஸ்கோர்ட் காரும் வழங்கப்படுகிறது. கங்குலிக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த திடீர் பாதுகாப்பு உயர்வுக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2 தசாப்தங்களுக்கு முன்னர் கங்குலிக்கு இதே போன்று Z வகை பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கடத்தல் மிரட்டலையடுத்து இந்த பாதுகாப்பானது அவருக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட ஒருவருக்கு நிகழும் அபாயத்தை கருத்தில் கொண்டு இதுபோன்று உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும்.
More