தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Andhra Accident: கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்!

Andhra Accident: கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்!

Jun 14, 2024 04:10 PM IST Karthikeyan S
Jun 14, 2024 04:10 PM IST
  • ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சீத்தனப்பள்ளி அருகே இன்று (ஜூன் 14)அதிகாலை மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேனை கண்டெய்னர் லாரி முந்திச் செல்ல முயன்ற போது அதன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் வழியிலேயே இறந்துவிட்டார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More