தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Car Accident: அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த கட்டடத்தில் மோதி விபத்து

Car Accident: அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த கட்டடத்தில் மோதி விபத்து

Apr 15, 2024 01:15 PM IST Manigandan K T
Apr 15, 2024 01:15 PM IST
  • Accident: சூலூரில் அதிவேகமாக வந்த சொகுசு கார் சாலையோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சூலூர் அடுத்த கலங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். கணியூர் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது சொகுசு காரில் கோவையிலிருந்து, கலங்கல் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் தனியாக சென்று கொண்டிருந்தார். சூலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கேக்கடையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை உடைத்துக் கொண்டு சுவற்றில் மோதி நின்றது. காரில் இருந்த ஏர் பேக்குகள் உடனடியாக திறந்ததால் நல்வாய்ப்பாக ஜெகதீஸ்வரன் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
More