ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய SFI அமைப்பினர்..நள்ளிரவில் திடீர் பரபரப்பு!
- கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்எப்ஐ அமைப்பினர் கருப்பு கொடி காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழகங்களை ஆளுநர் காவிமயமாக்க முயன்று வருவதாக கூறி, அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் (எஸ்எப்ஐ) சமீப காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கண்ணூர் மாவட்டம் மட்டனூர் பகுதிக்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.