Accident: தலைகுப்புற கவிழ்ந்த ஆம்னி பஸ்..20 பயணிகளுக்கு நேர்ந்த கதி!
- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.