H.Raja Interview: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து எச்.ராஜா கூறியது என்ன?
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நாடாளுமன்ற தேர்தலையொட்டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும் எனவும் ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி நாட்களில் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறினார். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆயிரம் பேசினாலும் அயோத்திய ராம ஜென்ம பூமியில் பாஜகவில் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்ற அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பாஜக உதவிகள் செய்வோம் என்று கூறியதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழு மன திருப்தியோடு நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார். இதன் காரணமாக மக்களிடையே நல்ல எண்ணம் உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.