உங்க வீட்டுல எப்படி தாங்குகிறாங்க உன்ன' மூதாட்டியின் கேள்வியிலிருந்து நழுவிய செல்வகணபதி
- தமிழக முழுவதும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது இந்த நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.. அதன் ஒரு பகுதியாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி , அக்ரஹாரம், காட்டூர் ,உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.. அப்போது காட்டூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் மாணவர்களுக்கு கிச்சடி உணவு தற்போது வழங்கப்படுகிறது, தாங்கள் படிக்கும் பொழுது எதுவும் வழங்கப்படவில்லை என வேட்பாளர் தெரிவிக்க, அதற்கு மூதாட்டி நாங்கள் படிக்கும் பொழுது கூல் ஊத்தினார்கள் தெரியுமா என எதிர்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர் பாட்டியை அடக்க முயன்றதால் மூதாட்டி வாய் இருப்பது கேள்வி கேட்க தான் உண்மையைத்தான் நான் கேட்கிறேன் என கூற திகைத்துப் போன திமுக வேட்பாளர் செல்வகணபதி வீட்டில் உன்னை எப்படி தாங்குகிறார்கள் என மலுப்பலாக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.. திமுக வேட்பாளர் செல்வ கணபதி நேற்று ஒரு மூதாட்டி சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில் தொடர்ந்து திமுக வேட்பாளரை மூதாட்டிகள் கேள்விக் கண்களால் துளைக்கும் சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.