“அவர பத்தி தப்பா பேசாதீங்க” - ஏ.ஆர். ரஹ்மான் மனைவி காட்டம்!
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர் எனவும், அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள் என்றும் சாய்ரா பானு மிக உருக்கமாக வாய்ஸ் மெசேஜ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சாய்ரா பானு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’எல்லோருக்கும் எனது நண்பகல் வணக்கம். இங்கே பேசுறது சாய்ரா பானு. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலமின்மையால், சந்தோஷமாக இல்லை. அதனால் தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிகிறேன்.
நான் ஒட்டுமொத்த யூடியூபர்களுக்கும் தமிழ் ஊடகத்தினருக்கும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அவரைப் பற்றி தவறாக செய்திபோடாதீர்கள். மனிதர்களில் அவர் ஒரு ரத்தினம். உலகத்திலேயே சிறந்த மனிதர். ஆம். எனது உடல்நிலைப் பிரச்னைகளால் நான் மும்பையில் சிகிச்சைப் பெற்று வருகின்றேன். ஏ.ஆர்.ரஹ்மானை அந்தளவுக்கு விரும்புகிறேன்: சாய்ரா பானு ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் அவரது பணிகளில் பிஸியாக இருக்கிறார்.
அதனால் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனக்கு நிறைய கவனிப்பு வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர். அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள். அவரை நான் வாழ்நாள் முழுவதும் நம்புவேன். அந்தளவுக்கு நான் அவரை விரும்புகிறேன்.
அவரும் என்னை விரும்பினார். அவர் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் நிறுத்தவேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அவரை தனிமையில் விட்டு வந்தபின், அவருக்குண்டான இடத்தைக்கொடுக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் நாங்கள் அறிவிக்கவில்லை. நான் விரைவில் சென்னை வருவேன். என்னுடைய சிகிச்சைகளை முடித்தபின் நான் சென்னைக்கு வருவேன். எனவே, ஏ.ஆர். ரஹ்மான் பற்றி அவதூறு பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி செய்வது ஒரு குப்பைத்தனம். அவர் ஒரு வைரம் போன்ற மனிதர்'' என சாய்ரா பானு உருக்கமாகப் பேசியுள்ளார்.