தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Saidai Duraisamy Press Meet

மகன் வெற்றி மறைவு..கண் கலங்கியபடி உருக்கமாக பேசிய சைதை துரைசாமி!

Feb 14, 2024 02:05 PM IST Karthikeyan S
Feb 14, 2024 02:05 PM IST
  • வெற்றி துரைசாமி உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு உருக்கமாகப் பேட்டி அளித்த சைதை துரைசாமி, "வெற்றி துரைசாமியை இமாச்சல பிரதேசத்துக்கு போகவே வேண்டாம் என கூறினேன். ஆனால், இதுவே கடைசி முறை என்றார். ஆனால் இதுவே கடைசி பயணமாக அமைந்துள்ளது. நான் மனம் கலங்க மாட்டேன். இன்னும் உறுதியோடும் வலிமையோடும் சேவையை பிரதானப்படுத்தி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன். என்னுடைய மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையோடு நான் இருக்கிறேன். எனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என உருக்கமாக பேசினார்.
More